இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றின் தலைசிறந்த வீரர் காலமானார்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டெரெக் அண்டர்வுட் காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறக்கும் போது அவருக்கு வயது 78. டெரெக் அண்டர்வுட் 1966 முதல் 1982 வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அந்த நேரத்தில் அவரது இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரால் “டெட்லி” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கிய இந்த தனித்துவமான சுழற்பந்து வீச்சாளர், ஐசிசி புகழ் மண்டபத்திலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





