கொழும்பில் திறக்கப்படவுள்ள மிகவும் பிரமாண்ட ஹோட்டல்
காலிமுகத்திடலை அழகுபடுத்தும் ITC ரத்னதீப, ஹோட்டல் மற்றும் சொகுசு வீடமைப்புத் திட்டம் நாளை (25) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த ஐடிசி ஹோட்டல் மற்றும் சூப்பர் ஹவுஸ் திட்டம், 300 மில்லியன் டொலர்கள் இந்திய முதலீடாக இயங்குகிறது, இது இந்தியாவிற்கு வெளியே இந்திய ஐடிசி நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாகும்.
காலி முகத்திடலுக்கு அழகு சேர்க்கும் வகையில் 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மிக உயரமான கட்டிடம் 48 மாடிகள் கொண்டதுடன் அதன் உயரம் 224 மீட்டர் ஆகும்.
இந்த கட்டிடத்திற்கு Sap High Residence என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் அதற்கு அடுத்துள்ள 140 மீட்டர் உயர கட்டிடத்தில் ITC ஹோட்டல் வளாகம் அமைந்துள்ளது.
இதில் 352 ஆடம்பர அறைகள் உள்ளன. இந்த இரண்டு கட்டிடங்களும் 55 மீட்டர் நீளமுள்ள SKY BRIDGE மூலம் இணைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
தெற்காசியாவின் ஒரே மற்றும் முதல் வான் பாலம் இதுவாகும். இந்த பாலத்தில் மிகவும் ஆடம்பரமான நீச்சல் குளமும் கட்டப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் கிடைப்பதற்காக AHASA என்ற இடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் காலி வாய்ப்பகுதி மிகவும் அழகாக காணப்படுகின்றது.
ITC திட்டமானது அதிநவீன வசதிகளுடன் கூடிய 5 நேர்த்தியான விழா அரங்குகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.