யாழில் மாபெரும் மார்கழி இசை விழா ஆரம்பம்
மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
வர்த்தகக் கண்காட்சியானது இன்று புதன்கிழமை(27) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மார்கழி 27, 28, 29ம் திகதிளில் மாலை 4.45 முதல் இரவு 9.15வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைவிழாவும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் இந்தியத்துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து யாழ் மத்திய கலாசார மண்டபத்தில் நடத்துகின்றன.
இந்நிகழ்வில் புகழ்பூத்த இலங்கைக் கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள். மேலும் தவில் நாதஸ்வர இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி, நாதசங்கமம், விரலிசை கானம், நாட்டிய நாடகம், மற்றும் இந்தியக் கலைஞர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.