கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகும் அரசாங்கம்!
கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து எவ்வாறு விலகுவது என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தலையீட்டினால் கூட்டுறவுச் சேவை பாதிக்கப்படுமாயின், அதன் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“தங்களுக்கு என்ன வகையான தலையீடு அரசாங்கத்திடம் இருந்து தேவை என்பதையும், அந்தத் தலையீடு எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கூட்டுறவு நிறுவனம் பரிந்துரைத்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“எனவே, பிரதமருடன் இணைந்து இது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்க நினைத்தோம்” என்று அவர் மேலும் கூறினார்.