ஜெர்மனியில் புதிய வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்!
ஜெர்மனியில் வருமானம் குறைந்தவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கு 240 ஆயிரம் யுரோ வழங்கப்பட கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் கட்டிட நிர்மாண துறை அமைச்சர் அவர்கள் இந்த வருடம் ஆரம்பத்தில் ஜெர்மன் நாட்டில் வசதி குறைந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு புதிய கடன் உதவி திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த உத்தேச திட்டமானது இன்றில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சமுதாயத்தில் வருமானம் குறைந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதாயின் ஆக குறைந்த வருமானமாக அவர்கள் வருடாந்தம் 60 ஆயிரம் யுரோக்களை பெற்று இருந்தால் இவ்வகையான வீடு கட்டுவதற்கான அதி குறைந்த வட்டி வீதத்திலான கடனுக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
மேலதிக பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய வருமானம் 10 ஆயிரமாக கணிக்கப்படும் நிலையில் ஆக மொத்தமாக ஒரு நபர் 2 லட்சத்து 40 ஆயிரம் யுரோக்களை கடனாக பெற முடியும்
ஜெர்மன் அரசாங்கமானது இந்த திட்டத்துக்காக இதுவரை 10 பில்லியன் யுரோக்களை முதலீடு செய்து உள்ளது.
இந்த வருடம் 350 பில்லியன் இதற்காக செலவிடப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறு உத்தேச புதிய சட்டத்தின் படி புதிய வீடு கட்டுவதாயின் 40 சதவீதமான எரிபொருள் சாதனங்களானது சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் எனறும் தெரியவந்துள்ளது.