மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து அரசு வகை சொல்ல வேண்டும்
உலகின் மிகவும் அபாயகரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்கிய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்ததன் மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளது என பொது ஜன பெரமுனவின் சிரேஷ்டசட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க கூறுகிறார்.
இன்று பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு சேதம் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பும் அரசாங்கத்தை சாரும் எனவும் நாட்டின் பாதுகாப்பு கள நிலவரம் தொடர்பான அறிவு இன்றி இதே போன்ற பல தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
(Visited 1 times, 1 visits today)