வருட இறுதிக்குள் இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்களை அதிகரிக்க திட்டமிடும் அரசாங்கம்!

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியின் வருமானமும் இதில் அடங்கும்.
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பை (GOR) அதிகரிப்பதற்காக 2024 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அது குறிப்பிடுகிறது.
(Visited 26 times, 1 visits today)