மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்ட தயாராகும் அரசாங்கம்!
மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்டுவது பற்றிப் பரிசீலிப்பதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் Zaliha Mustafa அதனைத் தெரிவித்தார்.
வடக்கில் தாய்லந்து எல்லையில் இருக்கும் Kelantan மாநிலத்திலும், கெடா மாநிலத்திலும் சுவர் எழுப்பத் திட்டமிடப்படுகிறது.
அதோடு இந்தோனேசிய எல்லையில் இருக்கும் சபா மாநிலத்திலும் சுவர் கட்டுவது பற்றி ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் மூலம் மலேசிய – தாய்லந்து, மலேசிய-இந்தோனேசிய எல்லைப்பகுதிகளில் சுவர்கள் எழுப்பத் திட்டமுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியா கடத்தல், ஆள்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, தடுப்புச் சுவர் போட நினைக்கிறது என அவர் தெரிவிக்கப்படுகின்றது.





