இலங்கை செய்தி

மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று முதல் அமுல்

இலங்கை மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று(09) முதல் அமுலுக்கு வருகின்றது.

2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தவிர்ந்த ஏனைய ஏற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பொறுப்பளித்து 06 நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிட்டு அண்மையில் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

வர்த்தமானிக்கமைய மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயற்பாடுகள் ஆகிய நடவடிக்கைகளை 06 நிறுவனங்களுக்கு பொறுப்பளிப்பதற்கான ஏற்பாடுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதனூடாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக மறுசீரமைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு பதிலாக புதிதாக நிறுவப்படவுள்ள 06 நிறுவனங்களில் 03 நிறுவனங்களுக்கான பொது முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் தற்போது அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான செயலணியின் பிரதானி புபுது நிரோஷன் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!