அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேர்தல் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமையே அதற்கு காரணமாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைகள் எவ்வளவு காலம் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை கூற முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடன் தற்போது டெலாவேர் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
லாஸ் வேகாஸ் நகரில் நேற்று ஆதரவாளர்களை ஜனாதிபதி சந்தித்ததாகவும், ஆனால் இரவில் நடைபெறவிருந்த பிரச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொவிட் பரிசோதனையின் பின்னர் ஜனாதிபதிக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பைடனின் மருத்துவர் கெவின் கானர், ஜனாதிபதி இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.