மொரோக்கோ பாராளுமன்றத்தில் உரையாற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி!
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (28.10) மொரோக்கோவிற்கு வருகை தந்துள்ளார்.
அங்கு அவர் வட ஆபிரிக்க இராச்சியத்தின் தலைவர்களைச் சந்தித்து வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கூட்டாண்மை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் மூன்று நாள் பயணத்தின் போது, அவர் மன்னர் ஆறாம் முகமது மற்றும் பிரதமர் அஜிஸ் அக்கன்னூச் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், மொராக்கோவின் பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
மக்ரோன் பிரான்சின் நீண்டகால பொது நிலைப்பாட்டை மாற்றி, சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவுக்கான மொராக்கோவின் சுயாட்சி திட்டத்தை ஆதரித்த சில மாதங்களுக்குப் பிறகு இது வருகிறது.
பிரான்சும் மொராக்கோவும் பயங்கரவாத எதிர்ப்பு முதல் மேற்கு சஹாரா வரையிலான பிரச்சினைகளில் வரலாற்று ரீதியாக கூட்டாளிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.