மில்லியன் கணக்கானோர் பார்வையிட்ட வருடத்தின் முதல் சூரிய கிரகணம்
மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது.
இந்த முழு சூரிய கிரகணத்தை சுமார் 32 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் மசாட்லானைச் சுற்றியுள்ள மேற்குக் கடற்கரையில், உள்ளூர் நேரப்படி காலை 11:07 மணிக்கு இந்த கிரகணம் முதலில் தெரிந்தது.
பின்னர், இது அமெரிக்கா மற்றும் கனடாவின் அட்லாண்டிக் கடற்கரை முழுவதும் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், நாசா தங்கள் இணையதளங்கள் மூலம் கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தது.
2044 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 22ஆம் திகதியன்று அமெரிக்கா மீண்டும் முழு சூரிய கிரகணத்தைக் காணும் என கூறப்படுகின்றது.