இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
அத்துடன் குறித்த கொள்கை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு வரும் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)