தென் கொரியாவில் பிறந்த முதல் ராட்சத பாண்டா இரட்டையர்கள்
தென் கொரிய மிருகக்காட்சிசாலையில் இரண்டு ராட்சத பாண்டா இரட்டையர்கள் பிறந்ததாக அறிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள எவர்லேண்ட் தீம் பார்க்கில் பெண் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக மிருகக்காட்சிசாலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ, இரண்டு சிறிய பாண்டா குட்டிகளைப் பெற்றெடுக்கும் முன், தாய் ஐ பாவ், பிரசவ வலியில், தனது கூண்டைச் சுற்றி உருளுவதைக் காட்டுகிறது.
முதல் இரட்டையின் எடை 180 கிராம் மற்றும் இரண்டாவது 140 கிராம் என உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
“தாய் மற்றும் இரட்டை பாண்டாக்கள் இருவரும் நலமுடன் உள்ளன” என்று மிருகக்காட்சிசாலையின் பிரதிநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





