இறுதி ஆட்டம் இன்று! வெற்றி நடை போடுமா இலங்கை?
இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் – இறுதியுமான ODI ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களின் பலத்தை நிரூபித்து தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது.
இதனால், இரு அணிகளும் இன்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளன.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த போட்டி, தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான மோதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆர். பிரேமதாச R. Premadasa மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்.





