ஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி
லிந்துலை – நாகசேனை பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து இளைஞர்கள் சிலர் லிந்துலை – நாகசேனை பகுதிக்கு சென்று ஆற்றில் நீராடியுள்ளனர்.
அதன்போது, அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.





