வட அமெரிக்கா

அமெரிக்காவில் நாயை கொலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பொலிஸ் நாயைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட 17 வயது இளைஞர் பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜொனெஸ்பொரோ நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய முறையில் நடந்துகொண்டதாகப் புகார் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரை கண்டதும் மூவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் இருவரை அதிகாரிகள் பிடித்தனர்.

மூன்றாவது இளைஞரைத் தேட பொலிஸார் நாய் அனுப்பியுள்ளனர். அவர் அருகில் இருக்கும் காட்டுக்குள் இருப்பதை நாய் கண்டுபிடித்தது.

அவரை வெளியே வரும்படி காவல்துறை கேட்டுக்கொண்டபோது அந்த இளைஞர் துப்பாக்கியால் நாயைச் சுட்டதாக தெரியவந்துள்ளது.

விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நாய் உயிரிழந்துள்ளது.சில மணி நேரம் கழித்து இளைஞரைத் தேடி கண்டுபிடித்த அதிகாரிகள், துப்பாக்கியைக் கீழே போடும்படி பல முறை அவருக்கு உத்தரவிட்டனர்.

இளைஞர் அதைக் கேட்காமல், துப்பாக்கியைக் காவல்துறையினரை நோக்கி நீட்டியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் சுட்டதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பொலிஸாருக்கோா
பொதுமக்களுக்கோ காயம் ஏற்படவில்லை.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்