இலங்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் கணவர்

அநுராதபுரம் – கெக்கிராவ – செக்குபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த 35 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியை யாரோ கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அவரது கணவர் நேற்று அதிகாலை கெக்கிராவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் மனைவி வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
(Visited 13 times, 1 visits today)