ஜெர்மனியில் இருந்து வெளியேற முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் பல மாநிலங்களில் பாடசாலைகளின் விடுமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் விடுமுறைக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட தாய் ஒருவர் அவரது குழந்தையுடன் விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் ஒரு தாயானவர் பாடசாலை விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தனது குழந்தையுடன் விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயற்சித்துள்ளார்.
விமான நிலையத்தில் கடமையாற்றிய எல்லை தடுப்பு பொலிஸார் தாயாரிடம் வினவிய போது தனது தாய் சொந்த நாட்டில் இறந்துள்ளதாகவும், தனது சொந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது குழந்தையை பாடசாலை விடுமுறை அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன் சொந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
பாடசாலை நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் எல்லை தடுப்பு பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் பாடசாலையில் தொடர்பு கொண்டு ஆராய்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.