அமெரிக்க ஜனாதிபதியின் மகளின் நாட்குறிப்பை திருடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகளது நாட்குறிப்புப் புத்தகத்தை திருடி பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார்.
அதனை விற்ற பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவைச் சேர்ந்த அவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனையும், 3 மாத வீட்டுத் தடுப்புக்காவலும் விதிக்கப்பட்டது.
நாட்குறிப்புப் புத்தகம் 4 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. எய்மி ஹாரிஸ் என்ற அந்தப் பெண் அதை Project Veritas எனும் சமூக ஆர்வலர் குழுவுக்கு விற்றதாக தெரியவந்துள்ளது.
ஹாரிஸ் திரு. பைடனின் மகள் ஆஷ்லி பைடனின் (Ashley Biden) நாட்குறிப்பை விற்றதற்கு 20,000 டொலரைப் (சுமார் 27,000 வெள்ளி) பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட Project Varitas அதை ஒரு செய்தித் தளம் என்று கூறிக்கொள்கிறது.
ரகசியக் கேமராக்கள் மூலம் படம் பிடித்துத் தகவல் வெளியிடுவதற்குப் பெயர் பெற்ற நிறுவனம் அதுவாகும்.
அதன் செய்கை ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள், செய்தி ஆசிரியர்கள், தொழிற்கட்சி உறுப்பினர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.