பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

எல்ல சிறிய சிவனொலி பாதத்தை பார்வையிடச் சென்ற 64 வயது பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
விபத்தில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை செங்குத்தான பகுதியில் நிகழ்ந்துடன் கீழே விழுந்த பெண்ணை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் அந்தப் பகுதியைத் தேடினர், பின்னர் உயிர்காப்பாளர்கள் அவரை மீட்டுள்ளனர்.
வெளிநாட்டு பிரஜை தற்போது தெமோதர மருத்துவமனையிலும் பின்னர் பதுளை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)