பிரான்ஸில் 3 அகதிகளை கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட பாக்ஸ்தானைச் சேர்ந்த இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 3 அகதிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடத்திச் சென்ற நிலையில், பொலிஸாரால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட இரு பாக்கிஸ்தானியர்களை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.
25 ஆம் திகதி வியாழக்க 25 வயதுடைய இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
13 அகதிகளும் இந்தியர்கள் மற்றும் பாக்கிஸ்தானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





