சிங்கப்பூர் தொழில் வழங்கிய முதலாளியை ஏமாற்றிய தமிழருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூர் தொழில் வழங்கிய முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்த தமிழருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி நிறுவனத்தில் விநியோக லொரி ஓட்டுநராக பணியாற்றிவந்த சிவம் கருப்பன் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது மேற்பார்வையாளர் குணசுந்தரம் என்பவரின் உதவியுடன் கிடங்கில் இருந்து கூடுதல் இறைச்சியை லொரியில் ஏற்றி சென்று வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்றுவந்துள்ளார்.
இதன் போது மேலாளரிடம் அவர் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்காக அவருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது கூட்டாளி குணசுந்தரத்தின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
(Visited 28 times, 1 visits today)