கொரோன வைரஸ் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்திய விஞ்ஞானிக்கு நேர்ந்தக் கதி!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் உலகிற்கு முதல் முதல் தெரியப்படுத்திய விஞ்ஞானி ஆய்வகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரும், அவரது குழுவினரும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வகத்திற்கு முன் அமர்ந்து போராட்டத்தை நடத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாள்வதை ஆய்வு செய்வதைத் தவிர்க்க சீன அரசாங்கம் எவ்வாறு விஞ்ஞானிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





