நடுவானில் விமானத்திற்கு நேர்ந்த கதி : திடீரென நிரம்பிய நச்சு புகையால் பதற்றம்!
பயணிகள் நிரம்பியிருந்த ஒரு விமானம், திடீரென நச்சுப் புகையால் நிரம்பியதை தொடர்ந்து பலரும் நோய் வாய் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்த பிரச்சினையை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக குறித்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது. அத்துடன் விமானம் தரையிறங்கியதுடன் துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)