சிங்கப்பூரில் விடுப்பு எடுப்பதற்காகப் போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்தவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் கருணை விடுப்பு எடுப்பதற்காகப் போலி இறப்புச் சான்றிதழ்களைத் தயாரித்த Nawwar Aisar Sardali என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
30 வயது Nawwar மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு ஆவணங்களுக்கமைய, அவர் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு முன்னர் முதல் போலி இறப்புச் சான்றிதழைத் தயாரித்தார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் வழக்கறிஞரை நியமிப்பது குறித்து யோசிப்பதாகவும் Nawwar குறிப்பிட்டுள்ளார்.
போலி இறப்புச் சான்றிதழைத் தயாரித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டு வரைச் சிறைத்தண்டனையோ 10,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 75 times, 1 visits today)