பிரான்ஸில் தீயை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு படை வீரருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸின் தலைநகர் பாரிசைச் சேர்ந்த இளம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய ஒரு வீரரே திங்கட்கிழமை காலை பலியாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை Saint-Denis நகரின் rue Landy வீதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த அதிகாரி உட்பட நான்கு தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீயை அணைக்க முற்பட்டபோது குறித்த 24 வயதுடைய அதிகாரி தீக்குள் சிக்கி காயமடைந்தார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





