பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
Marseille இன் 14 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Merlan எனும் நகர்ப்பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், குளியலறைத் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, அருகில் மின்னேறிக்கொண்டிருந்த தொலைபேசியை எடுக்க முற்பட்டுள்ளார். அதன்போது மின்சாரம் தாக்கி சிறுவன் நினைவிழந்துள்ளார்.
சிறுவனின் தயார் மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த அவர்கள், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்து. உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 17 times, 1 visits today)