வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிப்சை உட்கொண்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி..!

மிக அதிகமான காரமுள்ள சிப்சை உட்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்ஸ் சாப்பிடும் சவால் என்று சிப்ஸ் நிறுவனம் ஒன்று சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளது.அதைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக அதிக காரம் நிறைந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த சிப்ஸை சாப்பிட்டு விட்டு பள்ளி சென்றதாக கூறப்படும் அந்த சிறுவனுக்கு பள்ளியில் வயிறு வலி ஏற்பட்டதால் செவிலியர் ஒருவர் முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.வீடு திரும்பிய பிறகு சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஹாரிஸ் ஒலாபா மரணத்துக்கு அதிக காரம் கொண்ட சிப்சே காரணம் என்று தாயார் புகார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிப்ஸ் விற்பனையை ஆன்லைன் நிறுவனங்கள் திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட சிப்ஸ் விற்பனையை நிறுத்திவிட்டதாக அமேசானும் தெரிவித்தது.இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!