இலங்கையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

இலங்கையில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட,அது மோதலாக மாறிள்ளது. இந்தநிலையில், கோபமடைந்த கணவர் தமது மனைவியை தாக்கியுள்ளதுடன், பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)