குப்பைகளை எரிக்க சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டு குப்பைகளை எரித்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மரம் ஒன்றில் தீ பரவியுள்ளதை தொடர்ந்து குறித்த தீயை அணைக்க முயன்றுள்ளார் அதன்போது அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (05) நடைபெறவுள்ளது.





