குடிபோதையில் நீர்நிலையில் விழுந்து இளைஞருக்கு நேர்ந்த கதி

பண்டாரவளை – லியாங்கஹவல பகுதியில் உள்ள வாங்கேடி கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (26) நீரில் விழுந்து காணாமல் போயுள்ளதாக லியங்கஹவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்நிலைக்கு அருகில் குளிப்பதற்கு தயாரான போது வழுக்கி நீரில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் நண்பர்கள் குழுவுடன் குடிபோதையில் இருந்ததாகவும், பின்னர் நீராடச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சடலத்தை தேடுவதற்காக கிரிந்த கடற்படை துறைமுகத்தில் இருந்து டைவிங் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் அசேல பண்டார விஜேகோன் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)