மெக்சிகோ நோக்கி பயணித்த ரயிலுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

மெக்சிகோவில் செல்பி புகைப்படம் எடுக்கும் போது ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது குழந்தையுடன் இந்த புகைப்படத்தை எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்கா ஊடாக மெக்சிகோ நோக்கி பயணித்த ‘எம்பிரஸ்’ என்ற புகழ்பெற்ற நீராவி ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலுடன் செல்பி எடுக்க முடியாத அளவுக்கு அவர் ரயில் பாதைக்கு மிக அருகில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 15 times, 1 visits today)