ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு அகதியால் நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோவில் வைத்து 22 வயதுடைய பெண் ஒருவருக்கு அகதியால் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இளம் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட துனிஷியாவைச் சேர்ந்த ஆவணங்கள் அற்ற கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு, 7 ஆம் வட்டாரத்தின் Félix Faure நிலையத்தில் நின்றிருந்த எட்டாம் இலக்க மெற்றோவில் வைத்து குறித்த 22 வயதுடைய பெண்ணை அகதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

மெற்றோவுக்குள் அப்பெண் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய குறித்த அகதி, பெண்ணின் அந்தரங்கப்பகுதிகளில் கை வைத்துள்ளார்.

ஆனால், உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் துனிஷியாவைச் சேர்ந்த ஆவணமற்ற அகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!