சிங்கப்பூரில் மற்றொரு நபரின் காதைக் கடித்துக் குதறிய தமிழருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் மற்றொரு நபரின்காதைக் கடித்துக் குதறிய வெளிநாட்டு ஊழியருக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மனோகர் சங்கர் என்ற அந்த நபருக்கு 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
சம்பவம் 2020ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிலையில் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த சங்கர் அருகில் இருந்தவரை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
திட்டுவதை நிறுத்தும்படி பக்கத்தில் இருந்தவர் கூறியதைச் சங்கர் பொருட்படுத்தவில்லை. சங்கர், அந்த ஆடவரின் இடது காதைக் கடித்துக் குதறினார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆடவருக்கு முதலுதவி வழங்கினர். மறுநாளும் காதில் வலி இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.
சங்கர் அவரது இடது காதில் சுமார் 2 செண்டிமீட்டர் நீளமுள்ள பகுதியைக் கடித்துத் துப்பிவிட்டதாகத் தெரியவந்தது. காயத்தை ஆற்றவும் தையல் போடவும் சிகிச்சை தேவைப்பட்டது. வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காகச் சங்கருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.