பிரான்ஸில் பாடசாலையை விட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுவன் ஒருவரைக் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எசோன் நகரில் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. கை மற்றும் தொடைப்பகுதியில் கடித்து பிய்த்து எடுத்துள்ளது.
குறித்த சிறுவன் படுகாயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சிறுவனைக் கடித்து விட்டு நாய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாயின் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.





