கனடாவில் 80 பயணிகளுடன் பயணித்த விமானத்திற்கு நேர்ந்த கதி!
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (29.12) விமானம் ஒன்று தரையிறங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டது.
நியூஃபவுண்ட்லாந்தில் இருந்து வந்த பிஏஎல் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் கியர் செயலிழப்பை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விமானம் சுமார் 20 டிகிரி கோணத்தில் இடதுபுறமாக சரிந்ததாகவும், இறக்கை நடைபாதையில் சறுக்கத் தொடங்கியதும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.
துணை மருத்துவர்கள் மற்றும் நோவா ஸ்கோடியா ஆர்சிஎம்பி உள்ளிட்ட அவசரச் சேவைகள் விரைவாகப் பதிலளித்தன.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மருத்துவ மதிப்பீட்டிற்காக ஒரு ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் ஏர் கனடா பிரதிநிதிகளும் இந்தச் சிக்கல் இயந்திரமா, நடைமுறை ரீதியானதா அல்லது வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டதா என்பதை அறிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.