ஐரோப்பா

இராட்சத பலூனிலிருந்து குதித்த நபருக்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில், இராட்சத பலூன் ஒன்றிலிருந்து நெடுஞ்சாலையில் விழுந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சுவிட்சர்லாந்தின் Bernஇல்,நேற்று காலை 7.00 மணியளவில் இராட்சத பலூனில் பறந்துகொண்டிருந்த ஒருவர் நெடுஞ்சாலையில் விழுந்தார். ஆனால், அவர் அந்த பலூனிலிருந்து வேண்டுமென்றே குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

அப்போது அந்த பலூனில் ஆறு பேர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்கள். பலூனை இயக்கியவர் உடனடியாக அதை அருகிலுள்ள Hinterkappelen என்னும் கிராமத்தில் தரையிறக்கியுள்ளார்.

குதித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!