பிரித்தானியாவில் தவறான விமானத்திற்குள் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி
பிரித்தானிய மென்செஸ்ட்டர் விமான நிலையத்தில் தவறான விமானத்துக்குள் ஏறிய பயணி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
கூடுதல் பாதுகாப்புச் சோதனைக்காக விமானத்திலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு அவர்களிடம் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.
EasyJetஇன் மற்றொரு விமானத்தில் ஏறவேண்டிய அந்தப் பயணி தவறுதலாக மிலானுக்குச் செல்லும் விமானத்தில் ஏறினார். மிலான் செல்வதாகக் காட்டும் உரிய ஆவணங்களை அவர் வைத்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. இதையடுத்து அச்சம்பவம் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டதில்லை என்பது உறுதியானது.
ஆனாலும் உரிய அனுமதியின்றி விமானத்தில் ஏறியது, வேண்டுமென்றே அல்லது அலட்சியத்தால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக அந்த 20 வயது நபர் கைதுசெய்யப்பட்டார்.
தடுப்புக்காவலில் இருக்கும் அவர் விசாரணை செய்யப்படுகிறார்.