ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழ்ந்து வரும் வெளிநாட்டவரால் நேர்ந்த கதி
ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 27 பெயர்களில் பல ஐரோப்பிய நாடுகளில் வசித்துள்ளார்.
தற்போது ஜெர்மனியில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மையில் க்றீவெல்ட் நகரத்தில் தீ வைப்பு சம்பவத்தில் குறித்த நபரே ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஈரான் நாட்டை சேர்ந்த அகதிக்கு எதிராக ஜெர்மனியில் பல குற்றவியல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற தண்டனைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனியில் அகதிகள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 43 times, 1 visits today)





