இலங்கையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 23 வயதுடைய பிலோஸ் அனஸ்தாசியா என்ற உக்ரைன் யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவர் குடும்பத்தாருடன் எல்ல பகுதிக்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த யுவதி அந்த ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)





