சிவனொளிபாதமலைக்கு சென்ற ஐரோப்பிய நாட்டவருக்கு நேர்ந்த கதி
சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவியுடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட அவர் இன்று அதிகாலை சிவனொலிபாதமலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஊசியாறு பகுதியில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 68 வயதுடையவர் என்பதுடன், அவரது சடலம் தற்போது மஸ்கெலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)