பிரான்ஸில் பெற்றோருடன் பூங்கா சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் பூங்கா ஒன்றில் உள்ள குளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பகல் இச்சம்பவம் Massy (Essonne) நகரில் உள்ள Georges-Brassens பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
11 வயதுடைய குறித்த சிறுவன் பெற்றோர்களது கண் பார்வையில் இருந்து மறைந்து, குளத்தின் அருகே சென்றுள்ளார்.
அதிகளவு கூட்டம் இருந்த நிலையில், குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார். ஒருமணிநேரம் கழித்து அங்குள்ள குளம் ஒன்றில் இறந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளநல சிகிச்சை மையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டது.





