அமெரிக்காவில் பூட்டிய காரில் 7 மணி நேரம் விட்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமாஹாவில் காரில் தனியாக காரில் விட்டு செய்யப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழகு நிலையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கார் நிறு்த்தப்பட்டிருந்தது. பூட்டிய காரில் 7 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவன் தனிமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
40 வயதுடைய சந்தேகநபர் இந்தக் குழந்தையைப் பராமரிக்க நியமிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை மாலை 5 மணியளவில் சிறுவன் காரில் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஒமாஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண் தான் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு குழந்தையை சுமார் 7 மணிநேரம் கவனிக்காமல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
குழந்தை வெயிலின் தாக்கத்தால் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கடும் வெப்பத்தால் இறந்திருந்தால், இந்த ஆண்டு கார்களில் அதிக வெப்பத்தில் இறந்த 10வது குழந்தையாக அவர் மாறியிருப்பார்.