பிரான்ஸில் 12 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் சிறுவன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் Garches (Hauts-de-Seine) நகரில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
12 வயதுடைய சிறுவனே இந்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொப்பி ஒன்றை விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த சந்திப்பு, தாக்குதலில் முடிந்துள்ளது.
மாலை 5 மணி அளவில் இந்த சந்திப்பு Golf de Saint-Cloud மைதானத்துக்கு அருகே இடம்பெற்றது.
சிறுவனிடம் இருந்து பொருளை வாங்க வந்த நபர், சிறுவனை தாக்கி விட்டு அவனிடம் இருந்த தொப்பியினையும் பறித்து தொலைபேசியினையும் பறித்துள்ளார். பின்னர் சிறுவனது ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)