அமெரிக்காவில் பர்கர் சாப்பிட்ட 75 பேருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் பர்கரைச் சாப்பிட்ட 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
McDonald’s உணவகத்தின் Quarter Pounder பர்கரைச் சாப்பிட்டவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் பெரும்பாலோர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகும்.
கொலாராடோவை சேர்ந்த ஒருவர் உயிரழந்துள்ளார். Quarter Pounder பர்கரில் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் E. coli பாக்டீரியா இருந்ததாக நம்பப்படுகிறது.
குறிப்பாக எதில் பாக்டீரியா இருந்தது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு 13 மாநிலங்களிலுள்ள McDonald’s கிளைகளில் Quarter Pounder பர்கரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
கிளைகளுக்கு வெங்காயத் துண்டுகளை விநியோகிக்கும் Taylor Farms நிறுவனம் அதன் வெங்காயங்களை மீட்டுக்கொண்டது.
பாதிக்கப்பட்ட McDonald’s வாடிக்கையாளர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.