இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த பிரபல நாடு
மாலைத்தீவுகளுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கிறது.
காஸாவில் தொடரும் போரால் அந்த முடிவை எடுத்ததாக மாலைத்தீவுகளின் ஜனாதிபதி கூறினர்.
மாலைத்தீவுகள் பாலஸ்தீன வட்டாரத்துக்குப் பலத்த ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனர்களுக்கான நிதித்திரட்டையும் மாலத்தீவுகள் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளும் அரசாங்கப் பங்காளிகளும் இஸ்ரேலியர்களைத் தடை செய்யும்படி அதிபரை இதற்குமுன் நெருக்கினர்.
இதற்கிடையே, மாலத்தீவுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இஸ்ரேல் அதன் குடிமக்களிடம் அறிவுறுத்தியது.
மாலைத்தீவுகள் இதற்குமுன் 1990களில் இஸ்ரேலியர்களுக்குத் தடை விதித்தது. 2010ஆம் ஆண்டு இருதரப்பு உறவைப் புதுப்பிக்க அந்தத் தடையை மாலத்தீவுகள் நீக்கியது.
கிட்டத்தட்ட 11,000 இஸ்ரேலியர்கள் கடந்த ஆண்டு மாலத்தீவுகளுக்குச் சென்றுவந்தனர். இஸ்ரேல் நாட்டவர்மீதான தற்போதைய தடை எப்போது நடப்புக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.