AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி – லண்டன்வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்!
செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியை கட்டுப்படுத்தாவிட்டால் அது “வேலைவாய்ப்புகளை பெருமளவில் அழிக்கும் ஆயுதமாக” மாறக்கூடும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) எச்சரித்துள்ளார்.
மேன்ஷன் ஹவுஸில் பேசிய (Mansion House) அவர் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், லண்டனின் பணியாளர்களுக்கு, குறிப்பாக நிதி மற்றும் படைப்பாற்றல் தொழில்கள் போன்ற முக்கிய துறைகளில் AI அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் வேலைகளில் AI இன் தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய ஒரு புதிய பணிக்குழுவை நியமித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் எதிர்கால திறன் மாற்றங்களுக்கு ஏற்ப அனைத்து லண்டன்வாசிகளுக்கும் இலவச AI பயிற்சியை வழங்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இளைஞர்களின் மனநல நெருக்கடி போன்ற கட்டுப்படுத்தப்படாத சமூக ஊடக வளர்ச்சியின் எதிர்மறையான விளைவுகளை மேற்கோள் காட்டி, புதிய தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.





