சிங்கப்பூர் வீதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

சிங்கப்பூரில் KPE விரைவுச்சாலையில்கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்று மாலை 5.50 மணிக்கு தெம்பனீஸ் சாலை வெளியேறும் முன் கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் (KPE) தெம்பனீஸ் விரைவுச்சாலை (TPE) நோக்கி செல்லும் வழியில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF படைக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பான வீடியோ ஒன்று SG Road Vigilante ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டது.
காரின் என்ஜின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தண்ணீர் பீச்சியடிக்கும் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டதாகவும் SCDF கூறியது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து SCDF விசாரணை நடத்தி வருகிறது.
(Visited 10 times, 1 visits today)