இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு மின்சார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை, மின்சார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அந்த மருத்துவமனைகளின் இயக்குநர்களுக்கும் தொலைநகல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை நாளைக்கு முன் கட்டாவிட்டால், மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் 66 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், அம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் மின்சாரக் கட்டணம் 20 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் நிறுவனங்களில் மூன்று பில்லியன் ரூபா மின்சாரக் கட்டணங்கள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை செலுத்தாவிட்டால் அவற்றை துண்டிக்க நேரிடும் எனவும் இலங்கை மின்சார சபை சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.